ரஷ்யாவும், இந்தியாவும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக ஆழ்ந்த நட்புறவை கொண்டுள்ளன. இதற்கிடையில், ரஷ்யாவுக்கு
வருகை தரும்படி, மார்ச் மாதம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போருக்கு பிறகு, முதல்முறையாக மோடி ரஷ்யா செல்கிறார்.