பாஜகவினர் வன்முறையாளர்கள் என கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜக எம்.பி கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் ஸ்டாண்ட் அப் காமெடி செய்ததாகவும், இந்து கடவுள்களை காங்கிரஸ் கட்சியின் தூதுவர்களாக மாற்றியதாகவும் சாடியுள்ளார். மேலும், ராகுலின் பேச்சை கேட்டு, ஏற்கெனவே தான் சிரித்து விட்டதாகவும் கிண்டலடித்துள்ளார்.