இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாதது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. ஜிம்பாப்வே தொடரில் பெரிய அளவில் சோபிக்காத கில், ஜெஸ்வால் அணியில் இருக்கும்போது, ஏன் ருதுராஜை நீக்க வேண்டும். பிசிசிஐ-யின் அணித் தேர்வு ஒருதலைபட்சமாக உள்ளது என விமர்சிக்கும் நெட்டிசன்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள், ருதுராஜை அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.