தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெற மேல் முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேல்முறையீடு செய்து தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1.48 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வங்கிக்கணக்கு சரியானதுதான என அறிய நேற்று 1 ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு 1 ரூபாய் உங்கள் வங்கிக்கணக்கிற்கு வந்திருந்தால், உங்கள் வங்கிக்கணக்கிற்கு ரூ.1000 இன்று வந்து சேரும்.