குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களில் 110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க இலாகா துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 26 புள்ளி 26 லட்சம் டிரமடோல் போதை மாத்திரைகளும் நேற்று 42.24 லட்சம் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு 110 கோடியாகும். மேலும் அகமதாபாத்தில் ஆளில்லா குடோனில் இருந்தும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.