தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என்ற செய்தி கவலை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பொது விநியோகத்தில் வரலாற்று சாதனைகளை புரிந்து நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்த தமிழகத்தின் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு அவல நிலைக்கு சீர் கெட செய்த இந்த திமுக அரசுக்கு என்னுடைய கடும் கண்டனங்கள். ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.