லெபனான் நாட்டை விட்டு உடனே வெளியேற தனது குடிமக்களுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் லெபனான் நாட்டை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எந்த சூழலிலும் போர் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.