சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் ஜூலை 21ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.