வங்கதேசத்தில் கலவரத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 133ஆக அதிகரித்துள்ளது. அரசு வேலை இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்பு நடத்தி வரும் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் ரோந்து வருகிறது. தொலைக்காட்சி, இணையதளம், குறுஞ்செய்தி சேவை தடை செய்யப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 105ஆக இருந்தநிலையில், மேலும் 28 பேர் பலியாகியுள்ளனர்.