உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று நடைபெற்ற கிசான் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் கிசான் திட்ட நிதியின் 17 வது தவணை வெளியிடப்பட்டது. இதன் மூலமாக நாடு முழுவதும் ஒன்பது கோடியே 26 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். 20000 கோடி விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.