காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் வீதி உலாவின்போது சுவாமி முன்பு செல்வதில் வடகலை தென்கலை இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனை நீதிமன்ற உத்தரவின் படி, அறநிலையத்துறை அதிகாரிகள் குடவோலை முறையின் மூலம் தீர்த்து வைத்தனர். வடகலை, தென்கலை,என எழுதப்பட்ட சீட்டுகளில் ஒன்று, சிறுமியின் மூலம் எடுக்கப்பட்டது. அதில், வடகலை என்ற பெயர் வந்ததற்கு இரு தரப்பும் சம்மதித்து அதிகாரிகளிடம் கையெழுத்திட்டனர்