ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். உக்ரைனுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக அவர் வடகொரியாவை நாடுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.