தமிழகத்தில் ஒன்றரை கோடி லிட்டர் அளவு பால் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு, வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் கடந்த ஆண்டு அளித்துள்ளோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், பால் உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பு 21%-ஆக உள்ளது. தமிழ்நாட்டில் இரண்டே கால் கோடி லிட்டர் அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டு 36 லட்சம் லிட்டர் அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.