வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்கவுள்ளார். இதன் பின்னணியில், 2026 சட்டப்பேரவை தேர்தல் கணக்கு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2026 தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் வகையில், பிரியங்கா காந்தி தலைமையில் முன்னெடுப்புகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.