வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனோர் பற்றிய தகவல் தெரிவிக்க அவசர உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. வயநாடு மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தின் 807 840 9770 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காணாமல் போனவர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் பற்றி தகவல் தெரிவிக்கலாம். அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 170ஐ கடந்துள்ளது.