நடிகை வரலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. குடும்பத்தார் மட்டுமின்றி திரை பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை த்ரிஷா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வரலட்சுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.