ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தனது கட்டணத்தை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. அதில் ஜியோ கட்டண உயர்வு நாளை முதலும் ஏர்டெல் மற்றும் வோடபோன் கட்டண உயர்வு நாளை மறுநாள் ஜூலை ஐந்தாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்தக் கட்டணம் உயர்வால் வாடிக்கையாளர்கள் விலகி செல்லாமல் இருக்கவும் தக்க வைக்கவும் பழைய மாத ரீசார்ஜ் கணக்கிட்டு 365 நாள் வேலிடிட்டியுடன் ரூ.2,545, ரூ.3,099 திட்டங்களை மூன்று நிறுவனங்களும் அறிவித்துள்ளன.