வாடிவாசல் படத்தில் உண்மையான காளைகளை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு தெரிவித்துள்ளார். நிஜ காளைகளை கொண்டு படப்பிடிப்பு நடத்துவது கடினமாக இருந்ததால் கிராபிக்ஸில் காளைகளை உருவாக்கவே படப்பிடிப்பை தொடங்க தாமதமாவதாகவும் அவர் கூறியுள்ளார். வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் கை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.