வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றது. பயனாளர்களை தக்க வைக்க வாட்ஸ்அப் செயலி பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் மூலம் பகிரும் வீடியோ அல்லது புகைப்படத்தின் தரத்தை தேர்ந்தெடுக்கும் புதிய வசதியை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் இனி HD தர புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனாளர்கள் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி சோதனைக்கு பிறகு, விரைவில் பயனாளர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.