வாழ அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை நாட்டிலேயே வாழ அதிக செலவாகும் நகரமாக முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் 136 வது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி 164வது இடத்தையும், சென்னை 189 வது இடத்தையும், பெங்களூரு 195 வது இடத்தையும், ஹைதராபாத் 202வது இடத்தையும் பிடித்துள்ளன. ஹாங்காங் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது