விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த தொகுதியின் எம்எல்ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அங்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 21ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.