விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது, பாமக தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டார் உடன் இருந்தனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா காலையில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, தேமுதிக விக்கிரவாண்டி இடை தேர்தலை புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.