விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனு தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி 2022 ஆம் ஆண்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க வலியுறுத்தி சட்ட போராட்டம் நடத்தி வரும் செல்வி இடைத்தேர்தலில் போட்டியிட்டு கவனம் ஈர்க்க திட்டமிட்டுள்ளார்