விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.