விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கை செலுத்தினர். இந்த பணி அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பழனி தெரிவித்துள்ளார். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.