எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும், விக்கிரவாண்டி மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்பார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து ராதாபுரத்தில் பிரசாரம் செய்த அவர், “நமக்கு சமூகநீதி கிடைக்க இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. பாமக வெற்றி பெற்றால், பின்தங்கிய சமுதாயம் முன்னேறும். அடுத்த மாதமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 10.5% இடஒதுக்கீடும் கிடைக்கும்” என்றார்.