நடிகர் விஜய் தன்னை அழைத்தால் தவெகவில் சேர தயாராக உள்ளேன் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். நெருக்கடி காரணமாக அரசியலுக்கு நிச்சயம் வர உள்ளதாகவும், விஜய், சீமானுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாசிசத்திற்கும், ஆரியத்துக்கும் எதிரானதுதான் திராவிடம் என்றும், அதுதான் திராவிடத்தின் அடையாளம் எனவும் கூறிய அவர், அந்த உணர்வு நமது ரத்தத்திலேயே உள்ளதாகவும் கூறியுள்ளார்.