தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் விஜய்க்கு மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சினிமாவில் பல கோடிகள் சம்பாதித்து கொண்டிருக்கும் வேளையில், அதை விட்டுவிட்டு அரசியலில் காலடி எடுத்து வைப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார். தமிழருவி மணியன் ரஜினிக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.