தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் தற்போது ‘கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு கவலையாக இருந்தாலும், அவர் மக்களுக்காக அரசியலில் ஈடுபடவுள்ளதால் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு விலகினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். விஜய் 30 வருடமாக மட்டுமே சினிமாவில் நடிப்பதாக கூறிய அவர், 150 ஆண்டுகளாக சினிமா இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஒரு நபருக்காக சினிமா நிற்காது என்றும், அது பலரின் பங்களிப்போடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்றார். கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்வினையாற்றி கமெண்ட் செய்து வருகின்றனர்.