நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். விஜய் 30 வருடமாக மட்டுமே சினிமாவில் நடிப்பதாக கூறிய கஸ்தூரி, 150 ஆண்டுகளாக சினிமா இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஒரு நபருக்காக சினிமா நிற்காது என்றும் அது பலரின் பங்களிப்போடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.