உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 2 டிராக்டர்களுக்கு நடுவில் சங்கிலியை இணைத்து, அதை வேகமாக ஓட்டி எந்த டிராக்டர் சக்திவாய்ந்தது என்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 2 டிரைவர்களும் ஒரே நேரத்தில் டிராக்டர்களை இயக்கினர். அப்போது ஒரு டிராக்டர் குட்டிக்கரணம் அடித்தது. இதில் அதனை ஓட்டிய டிரைவர் உடல்நசுங்கி பலியானார். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.