PM கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.2000ஐ பெறுவதற்கு வசதியாக, தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகளுக்கு, 17ஆவது தவணை தொகையானது சமீபத்தில் வரவு வைக்கப்பட்டது.
வங்கிக் கணக்கில் உள்ள அந்தப் பணத்தை, விவசாயிகள் எடுப்பதற்கு (Withdraw) வசதியாக ஜூன் 30 வரை, சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தபால் துறை அறிவித்துள்ளது.