கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமகவினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் அனைவருக்கும், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இவ்வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.