சத்தீஸ்கரின் சம்பா மாவட்டத்தின் கிகிர்டா கிராமத்தில், இன்று கிணற்றில் இருந்து நச்சு வாயுவை சுவாசித்து 5 பேர் உயிரிழந்தனர். முதலில் கிணற்றில் விழுந்த பொருளைத் தேட இறங்கியவர் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற மற்ற நான்கு பேரும் இறங்கினர். அவர்களும் உயிர் இழந்தனர். கிணற்றில் இருந்து உடல்களை வெளியே எடுக்க பேரிடர் மீட்புக்குழு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.