கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ 10 லட்சம் தருவது தவறான முன்னுதாரணம் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், 100 நாள் வேலைத் திட்டம், இன்றைய இளைஞர்களை சோம்பேறிகளாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பதால், மதுவுக்கு மாற்றாக வேறு சில போதை வஸ்துக்களை தேடி செல்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.