வீடு விற்பனைக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி 20%இல் இருந்து 12.5% ஆக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதே நேரம், இன்டெக்ஸ் முறை நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதாவது, வீடு விற்பனையின் போது பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, மீதமுள்ள லாபத்திற்கு மட்டும் இதுவரை வரி செலுத்த வேண்டியிருந்தது. தற்போது பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் 12.5% வரி செலுத்த வேண்டும்.