வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம். முதலில் Å https://tnhb.tn.gov.in/ Own Your house-login என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் திறக்கும் பக்கத்தில் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். இதையடுத்து அவற்றுக்கு ஓடிபிக்கள் வரும். அதை பிழையில்லாமல் இணையதளத்தில் பதிவிட்டதும் அடுத்த பக்கம் திறக்கும்.
2ஆவது பக்கத்தில் ஏற்கெனவே வீட்டுவசதி வாரிய வீடு உள்ளதா, இல்லையா என குறிப்பிட வேண்டும். சம்பள ஆவணத்தை பதிவேற்றம் செய்து, பணிபுரியும் நிறுவனம், பதவி, ஊதியத்தை பதிவிட வேண்டும். இவற்றை பதிவிட்டதும் வீடுகள் எத்தனை உள்ளன. அவற்றின் விலை என்ன என்ற பட்டியல் வரும். இதை படித்துவிட்டு, மேலே உள்ள Type of Flat என்பதில் எந்த Type வீடு என்பதை தேர்வு செய்து, Save and Continue என்பதை அழுத்த வேண்டும்.
அடுத்தடுத்த பக்கங்களில் குடும்ப விவரங்கள், வங்கி விவரங்களை உள்ளிட்டு உறுதி செய்து, அதற்கான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இவற்றை முடித்தபிறகு ஆன்லைனிலேயே ஒப்புதல் அளித்தால் வரும் ரசீது உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்தோ, புகைப்படம் எடுத்தோ வைத்து கொள்ளலாம். பின்னர் வீட்டுவசதி வாரியத்தில் இருந்து “முதலில் வருவோருக்கு முன்னுரிமை” அடிப்படையில் வீடு தரப்பட்டதெனில் அழைப்பு வரும்.