அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதில் அவர், “உணவின் அருமையை உணர்ந்திருந்தால் சிறுமை எண்ணத்துடன் ஸ்டாலின் உணவை தன் உமிழோடு உதறி எறிந்திருக்க மாட்டார். முதலமைச்சர் என்ற பொறுப்புடன் ஆய்வு நடத்தாமல் வெறுப்புடன் ஆய்வு நடத்தியது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது!
ஒரு போட்டோவுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு! என்ற ஸ்டாலினின் மனக்குரலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பணக்காரன்-பாமரன் என்று வேறுபாடின்றி உணவளிக்கும் அம்மா உணவகத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்!” என கூறியுள்ளார்.