ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து தென்மேற்கு திசையில் 200 மைல் தொலைவில் Gotene என்ற நகரம் இருக்கிறது . Gotene மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மக்கள் தொகை குறைந்துகொண்டே வருவதோடு பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்து வருகிறது. எனவே, வீடு விற்பனைக்கு உத்வேகம் கொடுப்பதற்காக குறைந்த விலைக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டது. இங்கு 29 பிளாட் நிலம் தலா வெறும் 1 குரோனாவுக்கு விற்பனைக்கு வருகிறது. ஒரு குரோனா என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 7.84 ரூபாய். அதாவது 8 ரூபாயை விட குறைவு. மக்கள் நிலத்தை போட்டி போட்டு வாங்கினார்கள்.