இந்தியாவில் உள்ளவர்கள் தற்போது வெளிநாட்டில் சொத்து வாங்கவும், காப்பீடு செய்யவும், வெளிநாட்டு நாணயத்தில் நிலையான முதலீடு செய்யவும், கல்விக் கடன்களை செலுத்தவும் வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் தொடங்கலாம். தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணயக் கணக்கு திறக்கும் வசதி குஜராத்தில் உள்ள கிஃப்ட் சிட்டியில் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதுகுறித்த நிபந்தனைகளை அறிவித்தது.