மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்வதை, இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாள் கடமையாக கருதுகின்றனர். நடப்பாண்டில், உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் ஹஜ் பயணம் சென்றுள்ள நிலையில், வெப்ப அலையால் இதுவரை 1300 பேர் பலியாகியுள்ளனர். மேலும், அனுமதியின்றி வந்துள்ள 1.40 லட்சம் யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளதாக சவுதி சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 98 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.