டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படாதது அவருக்கு இழைக்கப்படும் அநீதி என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விமர்சித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக்தான் இருந்தார். ஆனால், தற்போது சூர்யகுமார் நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறியிருக்கும் பங்கர், இது நிச்சயம் அவரை ஆழமாக காயப்படுத்தி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.