சின்னத்திரை நடிகை சுஜிதா, தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருதமலையில் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கிருந்து வீடியோ எடுத்திருந்தார். அதில், ‘ஏர் ரைபிள்’ வகை துப்பாக்கிகள் 2 காட்சிப்படுத்தப்பட்டது. அது வேட்டையாட பயன்படுத்துவதா? என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவர் பாதுகாப்பிற்காக கூட வைத்திருக்கலாம் இருக்கலாம் என விளக்கம் அளித்துள்ளார்.